லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம்


லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம்
x

தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில் ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் என்கிற ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் மாதந்தோறும் திருவோண தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாதத்திற்கான திருவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருமாள் வெள்ளிகவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அப்போது பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி ஊர்வலமாக கோவில் முன்புள்ள 32 அடி உயரமுள்ள கல்ஸ்தூபியின் அருகே கொண்டுவரப்பட்டது. பின்னர் 6.30 மணிக்கு நாராயண பெருமாள் முன்னிலையில் கல் ஸ்தூபியில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் நாமக்காரர் முனுசாமி கவுண்டர் செய்திருந்தார்.


Next Story