பக்தர்கள் உடலில் கத்திபோடும் திருவிழா
டி.குன்னத்தூரில் பக்தர்கள் உடலில் கத்திபோடும் திருவிழா நடந்தது.
பேரையூர்,
டி.குன்னத்தூரில் பக்தர்கள் உடலில் கத்திபோடும் திருவிழா நடந்தது.
திருவிழா
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூரில் சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் வைகாசி மாதம் 3 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவையொட்டி பக்தர்கள் ஒரு வாரம் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
தொடர்ந்து கோவிலில் மல்லிகை கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் உடலில் சந்தனம் பூசிக்கொண்டு மல்லிகை கரகம் எடுத்து செல்லும்போது துஷ்ட சக்திகள் கரகத்தை அண்டவிடாமல் இருக்க பக்தர்கள் தங்கள் உடலில் கத்தி வைத்து கீறிக் கொண்டு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மல்லிகை கரகம் எடுத்து வரும்போது கத்தி போடும் பக்தர்கள் ஆரவாரத்துடன் பக்தி பரவசத்துடன் கத்தியை கைகளால் பலமாக தட்டியும், தங்களது உடலில் கத்தியை வைத்து கீறிக்கொண்டு தங்கள் பக்தியை வெளிப் படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நேர்த்திக்கடன்
பாரம்பரியமாக நடைபெறும் இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.