திருச்செந்தூரில் திருவிளக்கு பூஜை


திருச்செந்தூரில் திருவிளக்கு பூஜை
x

திருச்செந்தூரில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில் சார்பாக கீழரத வீதியில் உள்ள பண்ணையார் சமுதாய மடத்தில் உற்சவர் சாய்பாபா வைக்கப்பட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பனைதொழில் நலிவடையாமல் வளர்ச்சி பெறவும், பனை தெழிலாளர்களின் வறுமை போக வேண்டி சாய்பாபாவிற்கு பனை மரத்தில் இருந்து கிடைக்கும் கருப்பட்டி, பனங்கிழங்கு, நுங்கு, பனங்கற்கண்டு போன்ற படையல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக பாபாவிற்கு பதனீர் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை வழங்கப்பட்டது.


Next Story