மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை

விராலிமலையில் பிரசித்தி பெற்ற மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமமக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தின் முதல் நாளன்று திருவிளக்கு பூஜை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அந்த மாதம் முழுவதும் நடைபெறும்.

இந்தநிலையில், மார்கழி மாதத்தின் முதல் நாளான நேற்று அதிகாலை மெய்க்கண்ணுடையாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோமாதா பூஜை நடைபெற்று பின்னர் பெண்கள் தாங்கள் கொண்டுவந்த குத்துவிளக்கை ஏற்றிவைத்து பூஜை செய்து மெய்க்கண்ணுடையாள் அம்மனை வழிபட்டனர். அதன்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story