மாநில அளவிலான ஆக்கி போட்டியில் திருவாரூர் மாவட்ட அணி சாம்பியன்
மாநில அளவிலான ஆக்கி போட்டியில் திருவாரூர் மாவட்ட அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
திருச்சி
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் 7-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் திருச்சி, சென்னை, நெல்லை, சேலம், கோவை, மதுரை, திருவாரூர் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 14 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டன. பிரண்ட்ஸ் ஆக்கி கிளப் சார்பில் நடந்த இந்த போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மன்னை ஆக்கி அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2-வது இடம் பிடித்த திருச்சி பிரண்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3-வது இடத்தை பெற்ற கோவை சி.ஏ.எஸ். அணிக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டன. பரிசுகளை திருச்சி கோர்ட்டு ஜூடிசியல் நீதிபதி சிவகுமார் வழங்கினார்.
Related Tags :
Next Story