திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவிகளை தாக்கி கொலை மிரட்டல்


திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவிகளை தாக்கி கொலை மிரட்டல்
x

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவிகளை தாக்கி கொலை மிரட்டல்

நாகப்பட்டினம்

ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவிகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பல்கலைக்கழக மாணவிகள்

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு விடுதியில் தங்கி படித்து வந்த 2 மாணவிகள் நேற்று இரவு உணவு சாப்பிடுவதற்காக அருகில் உள்ள நாகை மாவட்டம் கங்களாஞ்சேரியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர்.

அப்ேபாது அவர்களிடம் பணம் குறைவாக இருந்தது. இதனால் ஓட்டலுக்கு எதிரே உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக ஒரு மாணவி மட்டும் தனியாக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒருவர், மாணவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அந்த மாணவி அந்த நபரை திட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

தாக்கி கொலைமிரட்டல்

இதனால் ஆத்திரம் அடைந்த 4 மர்ம நபர்கள் ஓட்டலுக்குள் புகுந்து அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்த 2 மாணவிகளை தகாத வார்த்தையில் திட்டி அவர்களை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் காயம் அடைந்த 2 மாணவிகளை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 பேர் கைது

இதுகுறித்து மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை ராம்ராஜ் அகரோ ரைஸ்மில் குவாட்டர்ஸ் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் வனிதராஜ்(வயது 29), திருவாரூர் மாவட்டம் பெரும்புகலூர் வடக்கு தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் செல்வதுரை (27) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்


Next Story