திருவள்ளூர்: தாறுமாறாக ஓடிய கார் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து - 7 பேர் காயம்


திருவள்ளூர்: தாறுமாறாக ஓடிய கார் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து - 7 பேர் காயம்
x

திருவள்ளூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து இன்று மாலை ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றுக்கொண்டு திருவள்ளூர் தேரடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை திருவள்ளூர் அடுத்த எறையூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சத்யா (21) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அந்த ஆட்டோவில் சித்தம்பாக்கத்தை சேர்ந்த ஜான்சி ராணி (40), நான்சி (வயது 32) மற்றும் மேன்சி (14) ,யாபேஸ்( 3), கிதியோன் (1) ஆகிய 5 பேரும் இருந்தனர்.

அந்த ஆட்டோ திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் அந்த ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. அந்த ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர் சத்யா உட்பட 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மேலும் அந்தக் காரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த திருவள்ளூர் அடுத்த ஆவடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் அப்பன் செல்வன்( 46 )என்பவருக்கு பின்பக்க தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார்.

இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயமடைந்த தலைமை காவலர் அப்பன் செல்வன் உட்பட 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளித்தனர்.

அவர்களில் தலைமை காவலர் அப்பன் செல்வன் சுயநினைவு இல்லாமல் உள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ரோகித் அஸ்வா (20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் டிரைவர் ரோகித் அஸ்வா (20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story