திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல கூட்டம்


திருப்பூர் மாநகராட்சி  2-வது மண்டல கூட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2023 9:07 PM IST (Updated: 29 Jun 2023 4:07 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வார்டுகளுக்குட்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினார்கள். இதற்கு பதில் அளித்து தலைவர் தம்பி கோவிந்தராஜ் பேசியதாவது:- கோடைகாலம் முடிந்து பருவமழை தொடங்க உள்ள நிலையில் 2-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக அனைத்து வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிôல் மற்றும் சாக்கடை கால்வாய்களை தூர்வார உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உப்புத் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து 15 வார்டுகளுக்கும் தலா ரூ. 1 லட்சம் மற்றும் மழைநீர் வடிகால்களை பராமரிக்க தலா ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இவ்வாறு மண்டல தலைவர் பேசினார்.


Next Story