உக்கிர மகா காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா


உக்கிர மகா காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா
x

கோடாலிக்கருப்பூர் கிராமத்தில் உக்கிர மகா காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிக்கருப்பூர் தெற்கு தெருவில் அமைந்துள்ள உக்கிர மகாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் காளியம்மன் திருநடனம் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கோவில் திருப்பணி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, திருநடன திருவிழா கடந்த 12-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 13-ந் தேதி இரவு துர்க்கை அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று உக்கிர மகாகாளி அம்மன் திருநடன உற்சவம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கண்டு களித்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.


Next Story