திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருமொழி திருநாள் உற்சவம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருமொழி திருநாள் உற்சவம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாசதி விழா கடந்த 23-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் எனப்படும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அன்று இரவு ராப்பத்து உற்சவம் தொடங்கியது. விழாவில் நேற்று திருமொழி திருநாள் உற்சவம் கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஶ்ரீ தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஏஜெண்டு எஸ்.கிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story