சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்


சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாள் இரவிலும் அம்மன், அர்ச்சுனன், கிருஷ்ணன் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. 5-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டு கோவில் முன்பாக வைத்து மேளதாளங்கள் முழங்க மகாபாரதத்தின் கதை அமைப்பில் உள்ள சிறப்புகளைப் போன்று திரவுபதி அம்மன் அர்ச்சுனன் திருக்கல்யாணம் காட்சி நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று இரவில் அர்ச்சுனன் தபசு காட்சி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story