சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி


சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
x
தினத்தந்தி 27 Oct 2023 1:15 AM IST (Updated: 27 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

நெகமத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

நெகமத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

நவராத்திரி விழா

நெகமம் பகுதியில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதையடுத்து 20-ந் தேதி மாலை விளக்கு பூஜை, 23-ந் தேதி இரவு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகியன நடைபெற்றது. பின்னர் 24-ந் தேதி காலை 9 மணிக்கு அலகு சேர்வை செய்து சக்தி அழைத்தல் மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று. இதில் விரதம் இருந்த பக்தர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடலில் கத்தி போட்டு கொண்டே கோவிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சி

தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மாவிளக்கு பூஜை மற்றும் ராகு தீப பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் இரவு 9 மணிக்கு அம்பு சேர்கை, அம்மன் திரு வீதி உலா மற்றும் அலங்கார வாண வேடிக்கைகள் நடைபெற்றன.

இந்த நிலையில் நேற்று காலை் 9 மணிக்கு அம்மனுக்கு, சுவாமிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, மேலும் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.


Next Story