திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திரவுபதி அம்மன் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேரடி அருகில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது .இந்தகோவிலின் தீமிதி திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டு,வில்வளைப்பு,திரவுபதி அம்மன் திருக்கல்யாணம்,அரவான் பலியிடுதல்,கர்ணமோட்சம் உள்ளிட்ட வரலாறு சிறப்புமிக்க நிகழ்வுகள் தினந்தோறும் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான 15-ம் நாளான நேற்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தீக்குண்டத்தில் இறங்கினர்

முன்னதாக காலையில் துரியோதனன் படுகளம் முடிந்தது.அதனை தொடர்ந்து மாலை காவிரி தீர்த்தவாரி படித்துறையில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர். அங்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியதையடுத்து பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 16அடிநீள அலகை வாயில் குத்தி தீமிதித்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க குத்தாலம் போலீஸ் நிலைய ஆய்வாளர் அமுதாராணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story