திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
தரங்கம்பாடி அருகே கீழபெரம்பூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழபெரம்பூர் திரவுபதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா சித்திரை மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அல்லி திருமணம், தர்மர் பிறப்பு , திரவுபதி பிறப்பு உள்ளிட்ட கதை பாட்டு நிகழ்ச்சிகள் தினமும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான படுகள நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சாமி வீதியுலா, கரகம் எடுக்கும் நிகழ்ச்சி 29.5.23 காலை 9 மணிக்கு நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கீழபெரம்பூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story