திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
திருமக்கோட்டை அருகே திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை அருகே மகாராஜபுரத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரவான் களப்பலி, அர்ஜுனன் தபசு, சக்தி கிரகம், பீமன் சபதம், திரவுபதி கூந்தல் முடிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. இதில் அம்மனுக்கு விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மகாராஜபுரம் கிராமமக்கள் செய்திருந்தனர். முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமக்கோட்டை போலீசார் செய்திருந்தனர்.