நகரசபை கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
செங்கோட்டை நகரசபை கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை நகரசபை கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆணையாளா் ஜெயப்பிரியா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தலைவர் ராமலட்சுமி பங்கேற்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினா்கள் பேசினார்கள். பின்னர் அவர்கள் நகரசபை தலைவர் அறைக்கு சென்றனர். அங்கு அவரிடம் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் உறுப்பினா்களுக்கும், தலைவருக்கும் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் உறுப்பினா்கள் வெளியில் வந்து, தலைவா் பதவியை ராஜினாமா செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினா். இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
Related Tags :
Next Story