கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஓட்டிய போஸ்டரால் பரபரப்பு


கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஓட்டிய போஸ்டரால் பரபரப்பு
x

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஓட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் அண்ணா பண்ணை நெடுஞ்சாலையில் நிலையப்பட்டி பிரிவுசாலை என்னும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வண்ணம் அந்தப்பகுதியில் வேகத்தடை அமைக்க அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்துக்கள், உயிரிழப்புகள் பெருகுவதை கண்டித்து இப்பகுதி மக்கள் சார்பாக நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் விதமாக மாபெரும் விபத்து விழா என்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக அப்பகுதியினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் முதல் பரிசு மரணம். வழங்குபவர் கிழக்கில் இருந்து வருபவர் எனவும், இரண்டாம் பரிசு உடல் உறுப்புகள் இழப்பு. வழங்குபவர் மேற்கிலிருந்து வருபவர் எனவும், மூன்றாம் பரிசு எலும்பு முறிவு வழங்குபவர் வடக்கில் இருந்து வருபவர் எனவும், நான்காம் பரிசு தையல் போடும் அளவிற்கு காயம் வழங்குபவர் தெற்கில் இருந்து வருபவர் எனவும், ஆறுதல் பரிசாக அனைவருக்கும் சிராய்வு மற்றும் லேசான காயங்கள் என்றும் உள்ளது. மேலும் விபத்துக்கள் உயிரிழப்புகள் பெருகுவதை கண்டித்து இப்பகுதி மக்கள் சார்பாக நூற்றுக் கணக்கான இருசக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் விதமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்த போஸ்டர் அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளதாலும், சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story