பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் தெப்பத்திருவிழா


பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் தெப்பத்திருவிழா
x

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் தெப்பத்திருவிழா

தஞ்சாவூர்

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழா

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்திரை திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 4-ந்தேதி தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, அக்னி காவடி, பறவைக்காவடி, வேல் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தெப்பத்திருவிழா

விழாவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவி்ல் அருகே அமைந்துள்ள குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் திருவிழா நடைபெற்றது. அப்ேபாது வள்ளி-தெய்வானையுடன் முருகன் தெப்பத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று சித்ரா பவுர்ணமி திருவிழா விடையாற்றி உற்சவமும், மண்டல அபிஷேகமும் நடைபெற்று விழா நிறைவடைந்தது. விழாவை சிறப்பாக நடத்தி கொடுத்த கோவில் பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன், அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் முடப்புளிக்காடு கிராமத்தார்கள், ஸ்தானிகர், சங்கரன் வகையறாக்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பேராவூரணி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story