தேனூர் மின் இணைப்புகள் நக்கசேலம் பிரிவு அலுவலகத்துக்கு மாற்றம்


தேனூர் மின் இணைப்புகள் நக்கசேலம் பிரிவு அலுவலகத்துக்கு மாற்றம்
x

தேனூர் மின் இணைப்புகள் நக்கசேலம் பிரிவு அலுவலகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

பெரம்பலூர்

திருச்சி பெருநகர மின் பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், மண்ணச்சநல்லூர் உபகோட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூர் கிராமம் மற்றும் பகிர்மானத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளும் மாவட்ட சீரமைப்பு காரணமாக நக்கசேலம் மின்வாரிய அலுவலகத்துடன் இணைக்க வேண்டி உள்ளது. இதனால் தேனூர் கிராமத்தில் உள்ள மின் இணைப்புகள், மின் பாதைகள் அனைத்தும் கடந்த 1-ந்தேதி முதல் நக்கசேலம் மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேனூர் கிராமம் மற்றும் பகிர்மானத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும், பொதுமக்களும் மின்சாரம் சம்பந்தமான அனைத்திற்கும் நக்கசேலம் மின்வாரிய பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும், என்று பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story