டிராவல்ஸ் உரிமையாளருக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரூ.5 லட்சம் திருட்டு -டெல்லியை சேர்ந்த டிரைவருக்கு வலைவீச்சு
மதுரையில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளருக்கு டீயில் மயக்க மருந்தை கலந்த கொடுத்து ரூ.5 லட்சம் திருடப்பட்டது. இது தொடர்பாக டெல்லியை சேர்ந்த டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரையில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளருக்கு டீயில் மயக்க மருந்தை கலந்த கொடுத்து ரூ.5 லட்சம் திருடப்பட்டது. இது தொடர்பாக டெல்லியை சேர்ந்த டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
டிராவல்ஸ் நிறுவனம்
மதுரை கோமதிபுரம் சன் ஸ்டார் தெருவை சேர்ந்தவர் சஞ்சய்குமார் (வயது 56). தொழிலதிபர். இவர் திடீர்நகர் பகுதியில் பச்சை நாச்சியம்மன் தெருவில் டிராவல்ஸ் மற்றும் லாரி சர்வீஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். மற்றொரு பங்குதாரர் வடமாநிலத்தை சேர்ந்தவர்.
வடமாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை இவர்கள் தென் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்வார்கள். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த ஜிஜேந்தர்(34) என்பவர் டிரைவராக இங்கு வேலைக்கு சேர்ந்தார். சம்பவத்தன்று நிறுவனத்தில் அதிகமான பணம் இருப்பதை அறிந்த அவர் அதனை அபகரிக்க முடிவு செய்தார்.
மயக்க மருந்து கொடுத்து...
அதன்படி சஞ்சய்குமாருக்கு டிரைவர் ஜிஜேந்தர் டீ கொடுத்துள்ளார். அதை குடித்ததும் மயங்கிய அவர் சில மணிநேரம் கழித்து கண் விழித்துபார்த்தார். அப்போது அங்கிருந்த 5 லட்சம் ரூபாயை காணவில்லை. மேலும் டிரைவர் ஜிஜேந்தரும் அங்கு இல்லை.
மேலும் டிரைவர் தான், டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. உடனே சஞ்சய்குமார் திடீர்நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ஜிஜேந்தரை தேடி வருகிறார்கள்.