கடையில் பணம் திருட்டு
கருங்கல் பஸ் நிலையம் அருகே கடை பூட்டை உடைத்து பணம் திருடி ெசல்லப்பட்டது.
கருங்கல்
கருங்கல் பஸ் நிலையம் அருகே கடை பூட்டை உடைத்து பணம் திருடி செல்லப்பட்டது.:
கருங்கல் அருகே கருப்பன் குடியிருப்புவிளை பகுதியை சேர்ந்தவர் மரிய மிக்கேல் (வயது 36). இவர் கருங்கல் பஸ் நிலையம் எதிரில் பழக்கடை நடத்தி வருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்தநிலையில் நேற்று காலையில் கடையை திறக்க வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ.10,500 திருடு போனது தெரியவந்தது.
யாரோ மர்மநபர் நள்ளிரவில் கைவரிசை காட்டியிருக்கலாம் என்பதை உணர்ந்த அவர் இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர்.