வீட்டில் பணம், பொருட்கள் திருட்டு


வீட்டில் பணம், பொருட்கள் திருட்டு
x

ஆலங்குளம் அருகே வீட்டில் பணம், பொருட்கள் திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள ராம்நகர் - புதுப்பட்டி சாலையில் வசித்து வருபவர் ஜான்சன் மகன் பென்ஸ்கர் (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மாமனார் ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டு பின்பக்க கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது டி.வி., லேப்-டாப், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.


Next Story