பயணிகளிடம் கைவரிசை காட்டும் திருடர்கள்


பயணிகளிடம் கைவரிசை காட்டும் திருடர்கள்
x

பயணிகளிடம் கைவரிசை காட்டும் திருடர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப் பகுதியாக விளங்குவது பரமக்குடி. இங்கு ஏராளமான கிராமங்கள் இருப்பதால் கிராம மக்கள் பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அவர்கள் பரமக்குடிக்கு வந்து அங்கிருந்து பஸ், ெரயில்களில் ஏறித்தான் செல்ல வேண்டும். ஆகையால் பரமக்குடி பஸ், ெரயில் நிலையங்கள் அதிக வருவாய் ஈட்டுகிறது. மேலும் கைத்தறி நெசவாளர்கள், வியாபாரிகள், அதிகஅளவில் உள்ளதால் இங்கு இருந்து வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் உற்பத்தி பொருட்களை அனுப்பி வைக்கின்றனர். இந்தநிலையில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் இரவு நேரங்களில் அவர்கள் செல்லும் பஸ்கள், ெரயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு கிடைக்காமல் அங்கேயே தங்கி செல்லும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு தங்கி இருப்பவர்கள் அசதியில் சற்று ஓய்வு எடுக்க விரும்பி தூங்கும்போது அதை நோட்டமிட்டு திருடர்கள் அங்கு வந்து படுத்து இருக்கும் பயணிகள் வைத்திருக்கும் பொருட்களையும், பணத்தையும் திருடி செல்கின்றனர். சில நேரங்களில் பயணிகள் தூக்கத்தில் இருந்து விழித்து விட்டால் அவர்களை அடித்து தாக்கி அவர்களிடம் இருந்து பணம், பொருட்களை பறித்து செல்கின்றனர்.இதனால் பரமக்குடி பஸ் நிலையத்திலும் ெரயில் நிலையத்திலும் பயணிகள் தனியாக காத்திருக்க அச்சப்படுகின்றனர். மேலும் பரமக்குடி பஸ் நிலையத்தில் போதிய மின்விளக்குகள் இல்லாமல் இருள் அடைந்து கிடக்கிறது. எனவே பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story