அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை


அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தப்பி ஓடினாா். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

விழுப்புரம் குண்டலப்புலியூரில் அனுமதி இன்றி இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 15 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் 15 பேரும் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளியான சுப்பிரமணிஅன்னி மாது (வயது 29) என்பவர் கழிவறைக்கு சென்றார். தொடர்ந்து அவர் கழிவறையின் உள் பகுதியில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஜன்னல் மற்றும் மரப்பலகைகளை உடைத்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் சுப்பிரமணிஅன்னி மாதுவை பல இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா கள்ளக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணிஅன்னி மாதுவை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story