தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x

திருவட்டார் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

குழித்துறை, ஜூன்.4-

திருவட்டார் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

திருவட்டார் அருகே கீழ சாய்க்காடு வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் விஜின் (வயது 31). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அத்துமீறி ஒரு வீட்டுக்குள் புகுந்தார்.

பின்னர் அங்கு தனியாக இருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்ததும் விஜின் தலைமறைவாகி விட்டார்.

கைது

இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விஜினை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே தலைமறைவாக இருந்து வந்த விஜின் நேற்று கீழ சாய்க்காட்டில் உள்ள தனது வீட்டுக்கு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து விஜினை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story