சாராய வேட்டைக்கு சென்ற போலீசார் வாகனத்தை மடக்கி பணம் கேட்டு சிக்கிய வாலிபர்..!


சாராய வேட்டைக்கு சென்ற போலீசார் வாகனத்தை மடக்கி பணம் கேட்டு சிக்கிய வாலிபர்..!
x

மயிலம் அருகே போலீசாரின் வாகனத்தை மடக்கி போலீஸ் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பெரும்பாக்கம் பகுதியில் மயிலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் போலீசார் பைக்கில் சாராய வேட்டைக்கு சென்றனர். அப்போது மயிலம் புதுச்சேரி சாலை, பெரும்பாக்கம் ஆவின் பாலகம் அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த இளைஞர் சாராய வேட்டைக்கு மப்டியில் சென்ற போலீசாரை நிறுத்தி தான் போலீஸ் எனக்கூறி வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை கேட்டு, மிரட்டியதாக தெரிகிறது.

ஆவணங்களை மப்டியில் சென்ற போலீசார் காட்டாததால், அந்த நபர் போலீசாரிடம் 1000 ரூபாய் கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் புதுச்சேரி மயிலம் சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீஸ் என கூறி தொடர்ந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் மயிலம் அடுத்த பெரும்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் சாம்ராஜ் என்கின்ற பவார்(32), என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்த 3550 ரூபாயை பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸ் என கூறி போலீசாரிடமே பணம் கேட்டு மிரட்டிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story