வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
x

வேலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் முள்ளிபாளையத்தை சேர்ந்தவர் அமல்பாஷா (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் கோட்டை சுற்றுச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்த திருமலை (26) என்பவர் அமல்பாஷாவை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலையை கைது செய்தனர்.


Next Story