ஆலங்குளம் பகுதியில் கம்பு மகசூல் அமோகம்


ஆலங்குளம் பகுதியில் கம்பு மகசூல் அமோகம்
x

ஆலங்குளம் பகுதியில் கம்பு மகசூல் அமோகமாக உள்ளது. குவிண்டால் ரூ.2,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் கம்பு மகசூல் அமோகமாக உள்ளது. குவிண்டால் ரூ.2,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கம்பு சாகுபடி

ஆலங்குளம் பகுதியில் உள்ள கொங்கன்குளம், தொம்பகுளம், கீழராஜகுலராமன், சாமிநாதபுரம், நல்லக்கம்மாள்புரம், கரிசல்குளம், அனந்தப்பநாயக்கர்பட்டி, கண்மாய்பட்டி, வலையபட்டி, மேலாண்மறைநாடு, கீழாண்மறை நாடு, ஏ.லட்சுமிபுரம், புளியடிபட்டி, கோபாலபுரம், எதிர்கோட்டை, முத்துச்சாமிபுரம், குண்டாயிருப்பு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கோடைகால பயிராக கம்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இந்த கம்பு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

குவிண்டால் ரூ.2,400

இது 100 நாளில் விளையக்கூடிய பயிராகும். தற்ேபாது கிணற்று பாசனத்தின் மூலம் விவசாயிகள் கம்பினை சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 குவிண்டால் மகசூல் கிடைக்கிறது. மகசூல் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேபோல ஒரு குவிண்டால் ரூ. 2,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோடைகாலத்தில் விளையக்கூடிய கம்பு, கோழி தீவனம், மாட்டு தீவனத்திற்கு மட்டுமே பயன்படும். அதேபோல கம்பு பயிரிட்ட நிலத்தில் மக்காச்சோளம் பயிர்செய்ய முடியாது. பருத்தி, மிளகாய் போன்ற பயிர்கள் தான் சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.


Related Tags :
Next Story