மிளகாய் விளைச்சல் அமோகம்


மிளகாய் விளைச்சல் அமோகம்
x

சாத்தூர் பகுதியில் மிளகாய் விளைச்சல் அமோகமாக உள்ளது. கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் பகுதியில் மிளகாய் விளைச்சல் அமோகமாக உள்ளது. கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மிளகாய் சாகுபடி

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிணற்று பாசனத்தின் மூலம் பருத்தி, கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்த படியாக பெரும்பாலான விவசாயிகள் மிளகாயை சாகுபடி செய்துள்ளனர்.

சிறுக்குளம், நத்தத்துப்பட்டி, கலிங்கமேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, முள்ளிச்செவல், என்.சுப்பையாபுரம், ஊமத்தம்பட்டி, ஸ்ரீரெங்காபுரம், நடுச்சூரங்குடி, நாரணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் அதிக அளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கிலோ ரூ.35

மற்ற காய்கறிகளை விட மிளகாய் செடிகளுக்கு செலவு குறைவு என்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் மிளகாய் பயிரிட்டனர். தற்போது விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது மிளகாய் அறுவடை செய்யப்பட்டு சாத்தூர் மார்க்கெட்டில் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விளைச்சல் அதிகரித்து வந்தால் ரூ.40 முதல் ரூ.50 வரை விலை உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மிளகாய்களை காயவைத்து வத்தலாக மாற்றுவதற்கு ஆயத்த பணிகளை செய்து வருவதாக கலிங்கமேட்டுப்பட்டி, முள்ளிச்செவல், நடுச்சுரங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கூறினர்.


Next Story