சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு818 பேர் எழுதவில்லை


சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு818 பேர் எழுதவில்லை
x

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு வி.ஐ.டி.யில் நடந்தது. இதனை 818 பேர் எழுதவில்லை.

வேலூர்

காட்பாடி

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு வி.ஐ.டி.யில் நடந்தது. இதனை 818 பேர் எழுதவில்லை.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான முதன்மை எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்திற்கு காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எழுத்துத் தேர்வு நடந்தது. இந்த தேர்வு மையத்தில் 5 ஆயிரத்து 434 பேர் தேர்வு எழுத அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 461 ஆண்களும், 973 பெண்களும் அடங்குவர்.

தேர்வு எழுத வருபவர்களுக்காக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வி.ஐ.டி. வரை அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு எழுத வந்தவர்கள பரிசோதனை செய்த பிறகே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். எழுத்து தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது.

தேர்வு மையத்தை வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு மைய அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

காலையில் நடந்த முதன்மை எழுத்துத் தேர்வில் 785 பேர் தேர்வு எழுத வரவில்லை. முதன்மை எழுத்துத் தேர்வு முடிந்து பகல் 3.30 மணிக்கு தமிழ்மொழி தகுதித்தேர்வு நடந்தது. இதில் 818 பேர் பங்கேற்கவில்லை.

சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வை முன்னிட்டு வி.ஐ.டி.பல்கலைகழகத்தில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.


Next Story