லைவ் அப்டேட்ஸ்: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ..!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.
அலங்காநல்லூர்,
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது. போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியைசைத்து தொடங்கி வைக்கிறார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகளும், 300 வீரர்களும் களம் காண உள்ளனர். வெற்றி பெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளன. அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக ஒரு காரும், சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2 எஸ்.பிக்கள், 8 ஏ.டி.எஸ்.பிக்கள், 29 டி.எஸ்.பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Live Updates
- 17 Jan 2023 7:48 AM IST
அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசிக்கும் நடிகர் சூரி
- 17 Jan 2023 7:44 AM IST
ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்
அலங்காநல்லூர்ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- 17 Jan 2023 7:43 AM IST
மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்பு
- 17 Jan 2023 7:43 AM IST
காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்க தயாராகும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
ஜல்லிக்கட்டில் களமிறங்க 1000 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
7 மருத்துவ குழுக்கள் 20 மருத்துவர்கள் உட்பட 80 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை
காளைகளுக்கு ஊக்க மருந்து சோதனை; காளைகளின் வயது, பற்கள், உடல்நிலை குறித்தும் சோதனை
- 17 Jan 2023 7:41 AM IST
வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு வீரர்களுக்கு தீவிர பரிசோதனை
20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்னிலையில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை
2 தவணை தடுப்பூசி, கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்