ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தொழிலாளி திடீர் சாவு


ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தொழிலாளி திடீர் சாவு
x

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தொழிலாளி திடீரென இறந்தார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் டாணா எரிகல்பாறை தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). சமையல் தொழிலாளியான இவர் நேற்று காலை சுமார் 11 மணிக்கு பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகள் இருக்கும் பகுதியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இறந்து விட்டார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன கணேசனுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.


Next Story