வீட்டின் மாடியில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து சாவு
தட்டார்மடம் அருகே வீட்டின் மாடியில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள கடக்குளத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சூர்யா (வயது 27). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜநித்யா (24). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சூர்யா கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை மனைவி கண்டித்துள்ளார்.
இந்நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் மாடி வீடு கட்டும் பணியிடத்துக்கு சூர்யா சென்றாராம். அப்போது மது அருந்திய போதையில் 2-வது மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story