தொழிலாளி விஷம் குடித்து சாவு
களக்காடு அருகே தொழிலாளி விஷம் குடித்து இறந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேலபடலையார்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பூபாலன் (வயது 52). கூலி தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் இவர் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திய போதையில் வருவது வழக்கம். கடந்த 29-ந் தேதி மாலையும் பூபாலன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளனார். இதனை மனைவி புஷ்பம் (48) கண்டித்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த பூபாலன் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்து பதறிய புஷ்பம் உறவினர்கள் உதவியோடு, அவரை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.