முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந்தேதி வருகை: நெல்லையில் மேடை, பந்தல் அமைக்கும் பணி மும்முரம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந்தேதி வருகை:  நெல்லையில் மேடை, பந்தல் அமைக்கும் பணி மும்முரம்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) நெல்லைக்கு வருகிறார். இதையொட்டி அங்கு பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) நெல்லைக்கு வருகிறார். இதையொட்டி அங்கு பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

8-ந்தேதி வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்று, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.

அதன்படி வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) நெல்லைக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்கிறார்.

விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

பந்தல் அமைக்கும் பணி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா, நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கப்படுகிறது. மைதானம் முழுவதும் சீரமைக்கப்பட்டு, அங்கு இரும்பு தூண்கள் நடப்பட்டு, அதன் மீது மழைநீர் புகாதவாறு தகரங்களால் மேற்கூரை அமைக்கப்படுகிறது.

கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அமரும் வகையில், பிரதான மேடையின் பக்கவாட்டிலும் 2 பந்தல்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பந்தலின் ஒரு பகுதியில் அனைவரும் பார்க்கும் வகையில் பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் வழி, அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் வரும் வழி, பொதுமக்கள் வந்து செல்லும் வழி ஆகியவையும் தனித்தனியாக அமைக்கப்படுகிறது.

விழாக்கோலம்

முதல்-அமைச்சரின் வருகையையொட்டி நெல்லை மாநகரம் விழாக்கோலத்துக்கு தயாராகி வருகிறது.

மேலும் நெல்லை மாநகரில் முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. சாலையோரத்தில் மண் கொட்டி சமப்படுத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கும் புதிய பணிகளையும் விரைந்து நிறைவேற்றி வருகின்றனர்.


Next Story