மகளிர் உரிமைத்தொகை திட்டம் முழுமையான வெற்றியை பெறும்


மகளிர் உரிமைத்தொகை திட்டம் முழுமையான வெற்றியை பெறும்
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் முழுமையான வெற்றியை பெறும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

விருதுநகர்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் முழுமையான வெற்றியை பெறும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

சிறப்பு முகாம்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் கிராம பகுதிகளில் 734 இடங்களில் நடைபெறுகிறது. இந்த முகாம்களுக்கு கலெக்டருடன் நேரில் சென்று பார்வையிட்டேன். முகாமில் குறிப்பிட்ட ஆவணங்களை வழங்கி தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து விட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

இந்த திட்டம் முழுமையான வெற்றியை பெறும் அதற்கு இந்த முகாம்கள் சிறப்பாக செயல்படுவதே முதல் படியாகும். ஆன்லைனில் பதிவு செய்ய 3 வகையான சர்வர்கள் செயல்பாட்டில் உள்ளது. எனவே ஒன்று செயல்படவில்லை என்றால் மற்றொன்றின் மூலம் பதிவு செய்து அனுப்புமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

வெடி விபத்து

எனவே இதில் எந்த பிரச்சினையும் இல்லை. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்துகளை முழுமையாக தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக வெடிவிபத்து நடந்து விடுகின்றன. ஆனால் கடந்த காலங்களை போல் அல்லாமல் வெடி விபத்துகளில் உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

ஆனாலும் முற்றிலுமாக வெடிவிபத்துக்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விண்ணப்பம்

முன்னதாக அருப்புக்கோட்டை தாலுகாவில் பெரியவள்ளி குளம், குல்லூர்சந்தை, பாலவநத்தம், மலைப்பட்டி, விருதுநகர் தாலுகாவில் அப்பைய நாயக்கன்பட்டி, சாத்தூர் தாலுகாவில் நல்லமநாயக்கன்பட்டி, குண்டலகுத்தூர், கே சொக்கலிங்கபுரம், சிறுகுளம், நத்தத்துப்பட்டி, வெங்கடாசலபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் ஜெயசீலனுடன் சென்று ஆய்வு செய்தார். மேலும் அலுவலர்களிடம் உரிய முறையில் தாமதம் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

நிவாரண உதவி

இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மண்குண்டாம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த படி தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சர் சாத்தூா் ராமச்சந்திரன் வழங்கினார்.


Related Tags :
Next Story