விபத்தில் காயமடைந்த பெண் சாவு
சேரன்மாதேவியில் விபத்தில் காயமடைந்த பெண் இறந்தார்.
சேரன்மாதேவி:
சுத்தமல்லி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகூர் மைதீன் என்பவருடைய மனைவி செய்யது அலி பாத்திமா (வயது 56). சுத்தமல்லி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் அல்ஷிபா மனைவி செய்யது மீராள் (27). இருவரும் 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சுத்தமல்லியில் இருந்து சேரன்மாதேவிக்கு வந்து கொண்டிருந்தனராம். செய்யது மீராள் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தாா். சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகில் வந்தபோது எதிர்பாராதவிதமாக செய்யது அலி பாத்திமா அணிந்திருந்த சேலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த செய்யது அலி பாத்திமா நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிசிச்சை பலன் இன்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.