சவுக்கு கம்புகள் தீயில் எரிந்து நாசம்


சவுக்கு கம்புகள் தீயில் எரிந்து நாசம்
x

தூத்துக்குடி அருகே சவுக்கு கம்புகள் தீயில் எரிந்து நாசமானது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டியைச் சேர்ந்த வீரிய பெருமாள் மற்றும் ஷேக் ஆகியோர் அய்யங்காடு பகுதியில் வயல்களில் வாழை பயிரிட்டுள்ளனர். வாழைகள் வளர்ந்த பின்பு காற்றில் சாய்ந்து விடாமல் இருப்பதற்காக வாழைகளுக்கு தேவையான சவுக்கு கம்புகளை அருகில் உள்ள பகுதிகளில் 2 பேரும் அடுக்கி வைத்து இருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் கம்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தெர்மல்நகர் தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் கோமதி அமுதா தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்தனர். எனினும் சுமார் 3,500 கம்புகள் எரிந்து நாசமானது. மேலும் இந்த தீயினால் அருகில் இருந்த வாழைகள், சொட்டுநீர் பாசனத்திற்கு உள்ள பைப்புகள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

தீவிபத்துக்கான காரணம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story