வைகை அணையின் நீர்மட்டம் 64.83 அடியாக சரிவு
தற்போது அணையின் நீர்மட்டம் 64.83 அடியாக உள்ளது.
கூடலூர்,
தேனி மாவட்டத்தில் பருவமழை கைகொடுத்ததால் 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு மழை படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. இருந்தபோதும் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் படிப்படியாக குறைந்த அணையின் நீர்மட்டம் இன்று 65 அடிக்கு கீழ் சரிந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 64.83 அடியாக உள்ளது.
அணைக்கு 930 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1319 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4593 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 140.70 அடி. வரத்து 695 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 7315 மி. கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி. வரத்து 100 கன அடி. திறப்பு 40 கன அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.44 அடி. வரத்து 88 கன அடி. திறப்பு 30 கன அடி.