பாபநாசம் அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்தது
பாபநாசம் அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்தது
விக்கிரமசிங்கபுரம்
பாபநாசம் அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்தது.
பாபநாசம் அணை
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளில் ஒன்றான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையானது, தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், கோடை வெயிலாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.
நீர்மட்டம் உயர்ந்தது
இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்து வரும் கோடை மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர தொடங்கியது.
நேற்று அணை நீர்மட்டம் 50.70 அடியாக உயர்ந்து இருந்தது. அணைக்கு வினாடிக்கு 766.32 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 354.75 கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 63.78 அடியாக உள்ளது.