முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது


முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் முல்லைப்ெபரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

தேனி

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர்ப்பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 135.35 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1,107 கன அடியாக காணப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 135.41 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 878 கன அடியாக குறைந்து காணப்பட்டது. வினாடிக்கு 511 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக முற்றிலும் மழைப்பொழிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story