காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்க தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும்-கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்


காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்க தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும்-கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்
x

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்திய காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்க ெதாண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ராமநாதபுரம்

தொண்டி,

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்திய காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்க ெதாண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருவாடானையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவாடானை சட்டமன்ற தொகுதி அளவிலான காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தனியார் மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஆர். ராமசாமி தலைமை தாங்கினார். திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் முன்னிலை வகித்தார். அனைவரையும் வட்டார காங்கிரஸ் தலைவர் கோடனூர் கணேசன் வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

விலைவாசி உயர்வு

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் மன்மோகன் சிங் தலைமையில் ஆன காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இன்றைக்கு உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 108 டாலராக விற்கப்பட்டது. 108 டாலர் கொடுத்து வாங்கி சமையல் எரிவாயு இந்தியாவில் 400 ரூபாய்க்கு வழங்கினோம். பெட்ரோல் 70 ரூபாய்க்கும், டீசல் 60 ரூபாய்க்கும் வழங்கினோம். இன்று உலகச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 60 டாலர் முதல் 70 டாலர் வரை தான் உள்ளது. ஆனால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1200, பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாய்.

9 ஆண்டுகளில் பா.ஜனதா இந்தியாவில் சாதித்தது என்ன? ஒரு நாட்டை கட்டுப்படுத்துவது பெட்ரோல். டீசல் விலைதான். இதனால்தான் இன்று இந்தியாவில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.

கிராமப்புற வேலைவாய்ப்பு

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தி இந்தியாவில் 15 கோடி குடும்பங்களை வறுமையில் இருந்து வெளியேற்றி அரசு என்று ஐ.நா. காங்கிரஸ் அரசுக்கு சான்று வழங்கியது. இந்தியாவில் வறுமையில் வாழ்கிற மக்களுக்காக திட்டங்களை தந்து நிதிகளை ஒதுக்கியது காங்கிரஸ் கட்சி. ஆனால் மோடி அரசு இன்று ஏழை எளிய மக்களைப் பற்றி கவலைப்படவில்லை மாறாக பணக்காரர்களைப் பற்றி சிந்தித்து கொண்டு இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி கே.ஆர். ராமசாமி யின் தலைமையில் வலிமையாக உள்ளது என்பதை இங்கு நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பார்க்க முடிகிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்திய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர தொண்டர்கள் அனைவரும் அயராது உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இ்ந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் மீனவர் பிரிவு தலைவர் ஆம்ஸ்ட்ராங், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், மாநிலச்செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் கோபால், பொதுக்குழு உறுப்பினர் ஜோதிபாலன், திருவாடானை வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கோடனூர் கணேசன், தெட்சிணாமூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் தொண்டி பாலசுப்ரமணியன், முருகானந்தம், மாவட்டச் செயலாளர்கள் எட்டுகுடி மரிய அருள், ஓரியூர் மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளர் நம்புதாளை பிச்சைக்கண்ணு, குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.குமார், ஒன்றிய கவுன்சிலர் கூகுடி கார்த்திகேயன் ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் மீனவர் பிரிவு மாநில செயலாளர் நம்புதாளை முத்துராக்கு, மாவட்ட காங்கிரஸ் வக்கீல் பிரிவு துணைத் தலைவர் எஸ்.பி.கண்ணன், தொண்டி நகர் காங்கிரஸ் தலைவர் காத்த ராஜா, அரசத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன், வட்டார இளைஞர் காங்கிரஸ் சரவணன் செட்டியார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினரும், மாவட்ட சொத்து மீட்பு குழு தலைவருமான ஏ.பாரிராஜன், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் கே.அன்புசெழியன், மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன், முன்னாள் யூனியன் தலைவர் மேகலா விஸ்வநாதன் மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்ட, வட்டார, நகர, கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். முடிவில் திருவாடானை நகர் காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story