"தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்" - கனிமொழி எம்.பி.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் - கனிமொழி எம்.பி.
x

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்கும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையம், அதன் அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்கும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய வரலாற்றுத்துறை சார்பில் நடைபெற்ற பேராசிரியர் கருணானந்தனின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், "தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வந்த பிறகு தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நிவாரணமும், வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டது.

பல முயற்சிகளுக்குப் பிறகு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தூத்துக்குடி மக்களுக்கும், அவர்களுக்காக போராடியவர்களுக்கும் இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார்."

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.


Next Story