விநாயகர் சிலை வந்த வாகனத்தை போலீசார் தடுத்ததால் பரபரப்பு


விநாயகர் சிலை வந்த வாகனத்தை போலீசார் தடுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Sept 2023 12:30 AM IST (Updated: 18 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் விநாயகர் சிலை வந்த வாகனத்தை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு 12 அடி உயரமுள்ள பெரிய விநாயகர் சிலையை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 3 நாட்களுக்கு முன்பு வைக்க அனுமதி கேட்ட நிலையில் போலீசார் மறுத்துவிட்டனர். நேற்று காலையில் அந்த சிலை கோவில் முன்பு வைக்க செங்கோட்டையில் இருந்து ஒரு வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.

தென்காசி கிராம நிர்வாக அலுவலகம் அருகில் வரும்போது போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி, மாலையில் தான் சிலையை வைக்க வேண்டும் என்றனர்.

அப்போது இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, பா.ஜ.க. கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் வாகனத்தில் இருந்து சிலையை இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வினர் தூக்கிக்கொண்டு ரத வீதி வழியாக கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் ரதவீதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த சிலை கோவில் முன்பு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் இருக்கும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story