மரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது


மரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது
x

களக்காடு அருகே மரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு-சேரன்மாதேவி சாலையில் பத்மநேரி பெரியகுளத்தின் கரையில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் நேற்று இரவில் திடீர் என தீப்பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மரம் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. மேலும் மரத்தின் அடிப்பகுதி தீயினால் கருகி சேதமடைந்ததால், மரம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயமும் எழுந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கும், நெடுஞ்சாலைதுறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து நிலைய அதிகாரி பாபநாசம் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மரத்தை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதையடுத்து களக்காடு-சேரன்மாதேவி சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தீ கட்டுப்படுத்தப்பட்டதும் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது. தீ விபத்து ஏற்பட்ட மரத்தின் அருகே அறுவடை செய்யப்பட்ட வாழைமர குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அதற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அந்த தீ மரத்திலும் பற்றியதாக கூறப்படுகிறது.


Next Story