வாய்க்காலில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து;டிரைவர் உயிர் தப்பினார்
வாய்க்காலில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.
ஈரோடு
அம்மாபேட்டை:
அந்தியூர் பச்சாம்பாளையம் பகுதியில் இருந்து செங்கல் (பிளை ஏஸ் பிரிக்) பாரம் ஏற்றிய டிராக்டர் ஒன்று அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அம்மாபேட்டையை அடுத்த பூதப்பாடி மணக்காட்டூர் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அங்கிருந்த மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று டிராக்டர் டிரைவரை மீட்டனர். இதனால் டிரைவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார். பின்னர் விபத்துக்குள்ளான டிராக்டரை மீட்கும் பணி கிரேன் மூலம் நடந்தது. 2 மணி போராட்டத்துக்கு பிறகு டிராக்டர் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story