4 பெண்கள் உள்பட 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சாராய வழக்கில் 4 பெண்கள் உள்பட 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வாணியம்பாடி
வாணியம்பாடியை அடுத்த நேதாஜிநகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மகேஸ்வரி என்பவருடைய தலைமையில் ஒருகும்பல் தொடர்ந்து சாராயம் காய்ச்சியும், விற்பனை செய்தும் வந்தனர். இவர்களை பலமுறை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்டுவந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மகேஸ்வரி உள்பட சாராய விற்பனை கும்பலை சேர்ந்த 28 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் தொடர் சாராய விற்பனை செய்ததால் மகேஸ்வரி, அவரது கூட்டாளிகளான சீனிவாசன், சின்னராசு, உஷா, ராணி, ஜோதி மற்றும் குடியாத்தம் கல்லபாடியை சேர்ந்த மோகன் ஆகிய 7 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்களை குண்டர்தடுப்பு சட்டத்தில்கைது செய்ய கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார்.