போதை பொருட்கள் வைத்திருந்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


போதை பொருட்கள் வைத்திருந்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

போதை பொருட்கள் வைத்திருந்த வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர்,

அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த சிதம்பரநாதன் (வயது 32), பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை சேர்ந்த கார்த்திக் (28), ஆலத்தூரை சேர்ந்த பாஸ்கர் (37), இரூர் கிழக்கு தெருவை சேர்ந்த முத்து செல்வன் (52) ஆகிய 4 பேரையும் பாடாலூர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா சிதம்பரநாதன், கார்த்திக், பாஸ்கர், முத்து செல்வன் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தற்கான உத்தரவின் நகல் சிறைத்துறை அதிகாரிகள் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


Next Story