திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு


திட்டக்குடி அருகே    விவசாயி வீட்டில் நகை திருட்டு
x

திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் நகை திருடு போனது.

கடலூர்


ராமநத்தம்,

திட்டக்குடி அடுத்த மருதத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் விவசாயி. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி விஜயலட்சுமியுடன் பெண்ணாடம் அடுத்த மேலூர் கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று காலையில் அவர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1¾ பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் இதேபோல், அருகில் உள்ள ராஜேந்திரன் மனைவி வாசுகி (45) என்பவருடைய வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகளை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றுள்ளனர். ஆனால் வீட்டில் பொருட்கள் ஏதும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story