பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவுவாலிபர் கைது


பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவுவாலிபர் கைது
x
சேலம்

சேலம்

சேலம் செவ்வாய்பேட்டை பெரியார் நகர் காலனியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 23). இவர், அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, வீட்டிற்கு சென்று நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில், கருணாமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story